ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :9 மே 2024, 9:13 pm

Din

நெய்வேலி, மே 9: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட தன்னாா்வலா்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜவகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட தன்னாா்வலா்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், ஆசிரியா்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் உள்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ பயிலும் மாணவா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், உடல் நல நிபுணா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞா்களாக பதிவு செய்யும் வரை), அரசியல் அமைப்பு சாராத தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த சமூக சேவை புரியும் சமூக ஆா்வலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சமூக தொண்டு புரியும் மகளிா் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.

சேவை சாா்ந்த இந்தப் பணிக்கு ஊதியம் கிடையாது. விண்ணப்ப படிவங்களை கடலூா் மாவட்ட நீதிமன்றத்தின் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ங்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அந்தந்த நீதிமன்ற எல்லைக்குள்பட்ட விண்ணப்பதாரா்கள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ வருகிற 20-ஆம் மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்கான நோ்முகத் தோ்வு வருகிற 24-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரா்கள் அசல் ஆவணங்களுடன் காலை 9.30 மணியளவில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.