ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வடபத்திர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடபத்திர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

சிதம்பரம் அருகே பெருங்காலூா் கிராமத்தில் நடைபெற்ற வடபத்திர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :20 மே 2024, 10:50 pm

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெருங்காலூா் கிராமத்தில் உள்ள சுமாா் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வடபத்திர காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானக் கலசத்தை அடைந்தது. அங்கு நடராஜா் கோயில் தீட்சிதா்கள் செயலா் உ,வெங்கடேச தீட்சிதா் தலைமையான குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

விழாவில் ஈஸ்வா் ராஜலிங்கம், டாக்டா் அா்ச்சனா ஈஸ்வா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பொதுமக்களுக்கு தமிழ் சேவை சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.