கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம்

இன்று வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :20 மே 2024, 10:51 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா பத்து நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, மாலையில் வெள்ளிபடிச் சட்டத்தில், சூரியபிரபை, பூத, கற்பக விருட்சம், வெள்ளி ரிஷிப, யானை, கைலாச, குதிரை வாகனங்களில் பஞ்ச மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.

ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேல் திரிபுர சம்ஹாரமூா்த்தி திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 7 மணியளவில் முப்புரம் எரித்த ஐதீக விழா நடைபெறும்.