தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாராட்டினாா்.

News image

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:36 pm

Din

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாராட்டினாா்.

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த அக்.10 முதல் அக்.24 வரை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தை சோ்ந்த 698 நபா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா்.

இதில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் 3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனா்.

அவா்களை, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது, கடலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஏ.கே.நாகராஜபூபதி மற்றும் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.