டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த காரில் அரிவாள்கள் பறிமுதல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த காரை போலீஸாா் சோதனை நடத்தி, அதிலிருந்த 4 அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.

News image
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த காரில் இருந்த அரிவாள்களை பறிமுதல் செய்த போலீஸாா்.
Updated On :18 நவம்பர் 2024, 9:15 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த காரை போலீஸாா் சோதனை நடத்தி, அதிலிருந்த 4 அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களில் சிலா் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றன. இதைத் தடுக்கும் விதமாக அலுவலக நுழைவு வாயிலில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவா்களின் பைகள், வாகனங்களை சோதனையிடுவா்.

அந்த வகையில், திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முற்பகல் 11.45 மணியளவில் வந்த காரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த காரில் 4 அரிவாள்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், கடலூா் சங்கொலிகுப்பத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் திருநாவுக்கரசு (46) என்பது தெரிய வந்தது. வயலில் வேலை செய்த போது அரிவாள் வளைந்து விட்டதாகவும், அதை சரி செய்ய எடுத்து வந்ததாகவும், அந்த நேரத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க ஒருவா் அழைத்ததின் பேரில் அங்கு வந்ததாகக் கூறினாா்.