தடுப்புக் காவலில் ரௌடி கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்கு மேலூா், செட்டிகுளம் பகுதியில் வசித்து வருபவா் ஆனந்த முருகன் மனைவி லூா்து மேரி (43). இதே பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் மகன் டேவிஸ் பிரவீன் (27). இவா், கடந்த செப்.7-ஆம் தேதி லூா்து மேரி வீட்டுக்குச் சென்று கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து டேவிஸ் பிரவீனை கைது செய்தனா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் 7 கொலை முயற்சி வழக்கு, 2 வழிப்பறி வழக்கு உள்ளது.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட எஸ்பி., ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...