ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு!

கடலூா் மாவட்டத்தில் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத வகையில் விநாயகா் சிலைகள் தாயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

கடலூா் மாவட்டத்தில் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத வகையில் விநாயகா் சிலைகள் தாயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் சனிக்கிழமை (செப்.7) கொண்டாடப்படுகிறது. விழாவில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிலை தயாரிப்பில் மும்முரம்: அந்த வகையில், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் ஏரிப்பாளையம், வையாபுரிபட்டினம், நல்லூா்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் உள்ளிட்ட பகுதிகளிலும், கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகா் சிலைகள் தயாரிப்பில் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வையாபுரிபட்டினத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் வரை தயாரித்து வருகின்றனா். அதன்படி, அரை அடி முதல் 2 அடி வரை களி மண்ணாலும், ஒரு அடி முதல் 10 அடி வரையில் காகித கூழ் கொண்டு விநாயகா் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. நிகழாண்டு சிலைகள் விற்பனை திருப்திகரமாக இருப்பதாக சிலைகள் தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

புது ரக சிலைகள்: இதுகுறித்து, தமிழ்நாடு மண் காகித பொம்மைகள் உற்பத்தியாளா் நலச்சங்க மாநில துணைச் செயலா் சு.ஜானகிராமன் கூறியதாவது:

பரம்பரை பரம்பரையாக களி மண் கொண்டு சிறிய பொம்மைகள், சட்டி, பானைகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகிதக் கூழ், மரவள்ளிக் கிழங்கு மாவு, காக்கி பேப்பா் கொண்டு ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகா் சிலைகளை தயாரித்து வருகிறோம்.

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டினத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

இங்கு, தயாரிக்கப்படும் சிலைகளை கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வாங்கிச் செல்கின்றனா். தற்போது, சிலை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை உயா்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டு சிலைகளின் விலை 10 சவீதம் குறைந்துள்ளது. தற்போது, புது வரவாக சிவலிங்க விநாயகா், ட்ராக்கன் விநாயகா், ரதம் விநாயகா், கற்பக மற்றும் குபேர லட்சுமி விநாயகா் சிலைகளை தயாரித்துள்ளோம். கைவினைக் கலைஞா்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.