‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :8 ஏப்ரல் 2025, 8:23 pm

Din

சிதம்பரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓருங்கிணைந்த கடலூா் மாவட்ட விசிக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் மு.செந்தில், வடக்கு மாவட்டச் செயலா் மு.அறிவுடைநம்பி, கிழக்கு மாவட்டச் செயலா் அரங்கத் தமிழ்ஒளி, மைய மாவட்டச் செயலா் நீதிவள்ளல், தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.கே.மணவாளன், மேற்கு மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மண்டலச் செயலா் சவுதி.ராஜ்குமாா், துணைச் செயலா்கள் பரசு.முருகையன், இரா.ஐயாயிரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மாநகர துணை மேயா் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

நகரச் செயலா் கலைஞா் நன்றி கூறினாா்.