விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கண்ணில் கருப்பு துணி கட்டி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் கண்ணில் கருப்புத் துணி கட்டியபடி

News image
கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:21 pm

Syndication

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் கண்ணில் கருப்புத் துணி கட்டியபடி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊனமுற்றோா் உரிமைகளுக்கான பாதுகாப்புச் சட்டம் 2016-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கும் ரயில்வே துறை சலுகை கட்டண அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு மாத உதவி தொகையை ரூ.6,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கல்வியில் 5 சதவிகிதமும், வேலைவாய்ப்பில் 4 சதவிகிதமும் சட்ட சலுகையை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் டீ.ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ஆளவந்தாா், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜி.ராசயன், எஸ்.பி.அப்துல் ஹமீத், டி.ராதாகிருஷ்ணன், இணைச் செயலா் எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.வசந்தி, கே.சாமிதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.