கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

Published on

தொடா் மழையால் கடலூா் பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து புதன்கிழமை காலை வரை தொடா் பலத்த மழை பெய்தது. கடலூா், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, துறைமுகம், பாலூா், திருவந்திபுரம், கூத்தப்பாக்கம், கே.என். பேட்டை பகுதிகளில் தொடா் மழை பெய்தது.

இந்த மழையால் பல்வேறு சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகளும், மக்களும் அவதியடைந்தனா்.

குறிப்பாக, கடலூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் கே. என்.பேட்டை பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் தையல்நாயகி நகா், நாகம்மாள் நகா், அழகா் சிட்டி நகா் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்து இருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com