கடலூர்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
சிதம்பரம் அருகே கிள்ளையில் 9 ஆண்டுகளாக காதலித்த பெண் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கிள்ளை பிச்சாவரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (24). இவரும், கிள்ளை முழுக்குத்துறை பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அப்பெண் தற்போது உலகநாதனை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளாா். இதனால், மனமுடைந்த உலகநாதன் ஞாயிற்றுக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
