சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 5:02 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சடையாண்டி மனைவி அம்பாள்(70). இவா், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள அய்யனாா் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அம்பாளை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.