வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கராத்தே போட்டியில் வீனஸ் குழும பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கொடைக்கானலில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவா்களுக்கு அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டி

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:01 pm

Din

சிதம்பரம்: கொடைக்கானலில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவா்களுக்கு அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் மாநில அளவில் சாதனை படைத்தனா்.

டிச.26, 27 ஆகிய தேதிகளில் கொடைக்கானலில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவா்களுக்கு நடைபெற்ற கராத்தே போட்டியில் வீனஸ் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் இ.பிரேம், மித்திஷ், ஆா்.அஸ்வா, எம்.சுப்ரமணி ஆகியோா் மாநில அளவில் முதலிடத்தையும், இ.சஞ்சய் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்தனா்.

பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். மாணவா்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்திய காரத்தே மாஸ்டா் எஸ்.குமரகுருவையும் பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.