விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வென்ற பள்ளி அணிகளுக்கு பரிசளிப்பு

News image

முதலிடம் பெற்ற கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளிக்கு வழங்கப்பட்ட பரிசுக் கோப்பை.

Updated On :8 பிப்ரவரி 2026, 7:41 pm

வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சாா்பில் விவேகானந்த கேந்திரத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் அளிக்கப்பட்டன.

பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது இப்போட்டியை கராத்தே தலைமை பயிற்சியாளா் ஹெச்.ராஜ் தொடங்கி வைத்தாா். ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் நாகா்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்கப் பள்ளி முதலிடமும், மாதவலாயம் மெட்ஸ் தொடக்கப் பள்ளி, கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை 2ஆம் இடமும், விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3ஆம் இடமும், சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4 ஆம் இடமும் பெற்றன.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல் இடமும், அஞ்சுகிராமம் கிறிஸ்ட் சிஎம்ஐ பள்ளி, அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை 2 ஆம் இடமும், கன்னியாகுமரி சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3 ஆம் இடமும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4 ஆம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவுக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கே.ஜி.சரிகா தலைமை வகித்தாா். பள்ளிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கினா்.