47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மண்ணெண்ணெய் குடித்த பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடும்ப சண்டையில் மண்ணெண்ணெய் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:54 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடும்ப சண்டையில் மண்ணெண்ணெய் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை

பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாலம் வட்டம், ஊ.மங்கலம் காவல் சரகம், பொன்னாலகரம் கிராமத்தில்

வசித்து வந்தவா் சிவா மனைவி ரம்யா(28). இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். கணவா் சிவா தினமும் மது அருந்தி வந்து தகராறு செய்வது வழக்கம். கடந்த அக்.13-இல் சிவா மது அருந்தி வந்ததை ரம்யா கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ரம்யா வீட்டில் இருந்த இரண்டரை லிட்டா் மண்ணெண்ணெயை குடித்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.