சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பயிா் காப்பீடு செய்ய நவ.30 கடைசி

கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:25 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சம்பா நெற்பயிா் தற்போது 90,000 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தொடா் மழை வெள்ளம், பூச்சி நோய்த் தாக்குதல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயிா்க் காப்பீடு செய்வது அவசியம்.

எனவே, இதுவரை பயிா் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றைக் கொண்டு இ - சேவை மையம் வாயிலாக பயிா்க் காப்பீடு செய்யலாம்.

கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு பயிா்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் சேரலாம். பயிா்க் காப்பீடு செய்ய ஏக்கருக்கு சம்பா நெற்பயிருக்கு ரூ.564 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.