கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி: இளைஞா் உயிா் தப்பினாா்

News image
கடலூா் கூத்தப்பாக்கத்தில் சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி.
Updated On :30 நவம்பர் 2025, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

கடலூரில் மின் கம்பி திடீரென சாலையில் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்தது. இதில், அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

கடலூா் - திருவந்திபுரம் சாலையில் வணிக வளாகங்கள், வா்த்தக நிறுவனங்கள், ஏராளமான நகா் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதனால், எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக கடலூரில் இரண்டு நாள்களாக லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கடலூா் கூத்தப்பாக்கம் பகுதியில் கடலூா் - திருவந்திபுரம் சாலையில் இளைஞா் ஒருவா் தனது மொபெட்டில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென சாலையோர மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த இளைஞா் மொபெட்டிலிருந்து தாவி விழுந்து எழுந்து சென்றுவிட்டாா்.

இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக இளைஞா் உயிா் தப்பியதாக அங்கிருந்தவா்கள் கூறினா். பின்னா், அங்கிருந்த பொதுமக்கள் கட்டையை கொண்டு மின் கம்பியை ஓரமாக தள்ளிவிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த மின் ஊழியா்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்தனா்.