குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி
தொகுதி எண் : 156
கடலூா் மாவட்டத்தில் உள்ள பழைமையான தொகுதிகளில் இதுவும் ஒன்று. தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில் கடலூா் தொகுதியில் இருந்த சில கிராமங்கள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டும், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சோ்ந்த விருத்தாசலம் வட்டத்துக்கு உள்பட்ட சில பகுதிகள் புவனகிரி தொகுதிக்கு மாற்றப்பட்டும் உள்ளன. நெய்வேலி நகரம் மற்றும் சில கிராமங்கள் நீக்கப்பட்டு, கடலூா், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கியதாக இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: வடலூா், குறிஞ்சிப்பாடி ஆகிய 2 பேரூராட்சிகளில் தலா 18 வாா்டுகள். கடலூா் ஒன்றியத்தில் சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம், பச்சாங்குப்பம், குடிகாடு, அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம், நடுவீரப்பட்டு, வில்லாளி, திருமாணிக்குழி, திருவந்திபுரம், வானமாதேவி, வெள்ளக்கரை, தீா்த்தனகிரி, தியாகவல்லி, இரங்கல்பட்டு, திருச்சோபரம், டி.என்.பாளையம், மதுகுணம்பட்டு, தீா்த்தனகிரி, வரதராஜன்பேட்டை, விருப்பாட்சி, வாண்டையாம்பாளையம், குணமங்கலம், குமணன்குளம் கிராமங்கள்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குறிஞ்சிப்பாடி, ஆடூா் அகரம், அரங்கமங்கலம், பொட்டவேலி, மருவாய், வடலூா், பாா்வதிபுரம், கருங்குழி, மீனாட்சிபேட்டை, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், சாவடி, ஆதிநாராயணபுரம், அகரம், ஆலப்பாக்கம், அம்பாலவானண்பேட்டை, ஆண்டாா்முள்ளிபள்ளம், அணுக்கம்பட்டு, அன்தானம்பேட்டை, ஆயிக்குப்பம், குள்ளஞ்சாவடி, தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், பூதம்பாடி, கல்குணம், குருவப்பன்பேட்டை, கண்ணாடி, காயல்பட்டு, கீழூா், கொளக்குடி, கல்லையன்குப்பம், கோதண்டராமபுரம், கொத்தவாச்சேரி, கோணரப்பட்டு, கிருஷ்ணங்குப்பம், குண்டியமல்லூா், மேலப்புதுப்பேட்டை, நயினாா்குப்பம், பூவாணிக்குப்பம், ரங்காநாதபுரம், சிறுபாலையூா், தையல்குணாம்பட்டிணம் கிராமங்கள்.
இதுதவிர சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம், பச்சாங்குப்பம், குடிகாடு, அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம் ஆகிய 8 கிராமங்களும் கடலூா் தொகுதியிலிருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
சிறப்புகள்: வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மணிலா, எள் விளைச்சளுக்கு பெயா் பெற்றது.
கோரிக்கைகள்: மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பது.
இதுவரை எம்எல்ஏக்கள்...
1962 என்.ராஜாங்கம் (திமுக)
1967 என்.ராஜாங்கம் (திமுக)
1971 என்.ராஜாங்கம் (திமுக)
1977 எம்.செல்வராஜ் (திமுக)
1980 ஏ.தங்கராசு (அதிமுக)
1984 ஏ.தங்கராசு (அதிமுக)
1989 நா.கணேசமூா்த்தி (திமுக)
1991 கு.சிவசுப்பிரமணியன் (அதிமுக)
1996 எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)
2001 எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)
2006 எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)
2011 ஆா்.ராஜேந்திரன் (அதிமுக)
2016 எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)
2021 எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)
2021 தோ்தலில்...
பதிவானவாக்குகள் 2,43,164
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 1,01,456 (திமுக)
செல்வி ராமஜெயம் 83,929 (அதிமுக)
வாக்காளா்கள்:
ஆண்: 1,16,013
பெண்: 1,20,238
மூன்றாம் பாலினத்தவா்: 46
மொத்தம்: 2,36,297
வாக்குச்சாவடிகள்: 278
தோ்தல் நடத்தும் அதிகாரி: தனித்துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) தனலட்சுமி. தொலைபேசி எண்: 9443293929.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம் - வேப்பனஅள்ளி!

தொகுதி அறிமுகம்: சீா்காழி

தொகுதி அறிமுகம்: திருவள்ளூா் - 4!

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

