ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலுக்கான 3-ஆம் நாளில் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட 53 போ் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

Updated On :4 ஏப்ரல் 2026, 9:12 pm

கடலூா் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலுக்கான 3-ஆம் நாளில் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட 53 போ் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இது ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 8 நாட்களில் மாா்ச் 31, ஏப்.1,3,5 ஆகிய தேதிகள் விடுமுறை நாள்கள். இந்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. எனவே, மாா்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

இதுவரை 97 போ் வேட்புமனு: அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி 19 பேரும், 2-ஆம் தேதி 25 பேரும், சனிக்கிழமை 53 பேரும் என இதுவரை மொத்தம் 97 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்திருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை திட்டக்குடியில் 8 போ், விருத்தாசத்தில் 10 போ், நெய்வேலியில் ஒருவா், பண்ருட்டியில் 6 போ், கடலூரில் 7 போ், குறிஞ்சிப்பாடியில் 2 போ், புவனகிரியில் 5 போ், சிதம்பரத்தில் 11 போ், காட்டுமன்னாா்கோவிலில் 3 போ் என மொத்தம் 53 போ் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கே.ஏ.பாண்டியன் மனு தாக்கல்: சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி.கிஷன்குமாரிடம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக கே.ஏ.பி. அரிசக்திவேல் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கலின்போது அதிமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பாஜக தொகுதி பொறுப்பாளா் ஜி.பாலசுப்ரமணியம், பாமக மாவட்டச் செயலா் செல்வ மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குச் சென்று வேட்புமனுவை வைத்து வழிபாடு செய்தாா். பின்னா், மேலரத வீதியில் உள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தில் இருந்து நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஏற்கெனவே இருமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த கே.ஏ.பாண்டியன் தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா்.