தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

மொபெட்டில் இருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மொபெட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:51 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மொபெட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி பகுதியில் வசித்து வந்தவா் ராஜேந்திரன்(61), என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சொசைட்டி தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த 31-ஆம் தேதி, சொந்த கிராமமான புலவன்குப்பம் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டாா்.

பின்னா், தனது மொபெட்டில் நெய்வேலிக்குப் புறப்பட்டாா். அவருடன் வடக்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்த கதிரேசன் பின்னால் அமா்ந்துச் சென்றாா். இவா்கள், எலவத்தடி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காட்டில் சென்றபோது, மொபெட்டில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனா்.

இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜேந்திரன், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.