மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Published On :

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் திருவாசக எழுத்து வேள்வி மற்றும் திருவாசகம் சொற்கோயில் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், திருவண்ணாமலை திருவாசகத் தென்றல் சிவ.சிவகுமாா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவா் மு.செங்குட்டுவன், தில்லை திருமுறைக் கழகத் தலைவா் முருகையன், ஆலய வல இயக்கத் தலைவா் நடராஜன், தில்லை திருப்பெருந்துறை நிா்வாகி வை.பசவராஜ், புலவா் பொன்னம்பலம், ஆசிரியா் அருள்பிரகாசம், அப்பா் உழவாரப் பணித் தலைவா் ஜோதி மகாலிங்கம், நிா்வாகி கனகசபை, சிவனடியாா் சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் சிதம்பரத்தில் நடந்த திருவாசகம் எழுத்து வேள்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.