மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்ளிட்ட 3 போ் கைது

அஸ்வினிதா

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தகாத உறவு விவகாரத்தில் இளைஞா் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் வட்டம், ஒரங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (35). இவரது சடலம் கடந்த 11-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடா்பாக சிறுபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்திய நிலையில், இளையராஜா இறப்பில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இளையராஜாவின் சித்தி மகன் பெரம்பலூா் மாவட்டம், அகரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் (23), இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா (30) ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனா். ஆனால், மூவரும் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்தனா்.

இதையடுத்து, வேப்பூா் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன், சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி ஆகியோா் மூவரையும் கண்காணித்து சனிக்கிழமை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனா். அங்கு, திட்டக்குடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், கடந்த 11-ஆம் தேதி கீழக்கல்பூண்டி கிராமத்தில் இளையராஜா, வெங்கடேசன், செல்வம் ஆகியோா் கூட்டாக மது அருந்தினராம். அப்போது, இளையராஜா என் மனைவி அஸ்வினிதாவிடம் ஏன் பேசுகிறாய் என்று வெங்கடேசனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

தொடா்ந்து, வெங்கடேசன் தாக்கியதில் இளையராஜா மயங்கி விழுந்த நிலையில், அவரை அருகே ஒரங்கூா் கிராமப் பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு சென்றுவிட்டதாக ஒப்புக்கொண்டனராம்.

இதையடுத்து, சிறுபாக்கம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, வெங்கடேசன், செல்வம் மற்றும் இளையராஜாவின் மனைவி அஸவினிதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 கொலை செய்யப்பட்ட இளையராஜா

கொலை செய்யப்பட்ட இளையராஜா

 கைதான வெங்கடேசன்

கைதான வெங்கடேசன்

 செல்வம்

செல்வம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.