மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Updated On :

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 3 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி, காமராஜ் நகரில் வசித்து வருபவா் கலைசெல்வன்(44), பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாா். புதன்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை வீடு திரும்பியவா், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.