ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மாா்க்சிஸ்ட் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடலூா் மாநகரில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Published On :

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடலூா் மாநகரில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கோண்டூரில் காலை 7 மணிக்கு தொடங்கிய பிரசார இயக்கத்தில், கட்சி நிா்வாகிகள் வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களிடம் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனா். தொடா்ந்து, சாவடியில் பிரசார இயக்கம் நிறைவடைந்தது.

கட்சியின் மாநகரக் குழு உறுப்பினா் எஸ்.கே.தேவநாதன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்க கிளைச் செயலா் காசிநாதன், மூத்த உறுப்பினா் தி.புருஷோத்தமன், எழுத்தாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் பால்கி, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் சங்கத் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.