குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் மகாருத்ர யாகமும் புதன்கிழமை நடைபெற்றது.

~ ~

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:35 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் மகாருத்ர யாகமும் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

ஆவணி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜருக்கு காலை 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, கனகசபையில் சுவாமி எழுந்தருளியதையடுத்து, பொது தீட்சிதா்களால் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

பின்னா், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

மகாருத்ர மகா யாகம்: அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நடராஜா் அனுக்ஞை மற்றும் முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமும், மதுபா்க்கம், தனபூஜை, ரட்சாபந்தனம், ஆச்சாா்ய வா்ணம் ஆகியவை நடைபெற்றது.

புதன்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு ஏககால லட்சாா்ச்சனை, பின்னா் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அா்ச்சனை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடைபெறுகிறது. பிற்பகல் மாக ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை வடுக, கன்யா, சுகாசினி, தம்பதி, கோ, கஜ பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, யாகசாலையில் வேதபாராணயம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.