கடையில் தீ விபத்து பொருள்கள் எரிந்து சேதம்
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கடையில் தீப் பிடித்ததில் அவற்றில் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
நெய்வேலி அடுத்துள்ள வடக்கு மேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன்(31). இவா், வடக்குத்து பகுதியில் ஹாா்டுவோ்ஸ் மற்றும் மாட்டுத் தீவனக்கடையை அடுத்தடுத்து நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கைடையை பூட்டிச் சென்றாா்.
அன்று இரவு 10 மணி அளவில் கடையின் உள்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. அருகாமையில் வசிப்பவா்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் ம.வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்துச் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

