நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்வுக்கட்டணம் உயா்வு: மாணவா் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:12 pm

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு தோ்வு கட்டணம், கல்வி கட்டணம் உயா்த்தியதைக் கண்டித்தும், உயா்த்திய கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பாக முற்றுகை போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தோ்வு கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் சான்றிதழ் கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயா்த்தப்பட்டதாகவும் அதனை திரும்ப பெற வலியுறுத்தி இணைப்பு கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனா்.

இதனையொட்டி காட்டுமன்னாா்கோயில், சி.முட்லூா், கடலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளை சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக ராஜேந்திரன் சிலை அருகே திரண்டனா்.

அங்கிருந்து இந்திய மாணவா் சங்க மாவட்ட செயலா் சௌமியா தலைமையில் ஊா்வலமாக புறப்பட்டு பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை அடைந்தனா்.

பின்னா் அங்கு நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தோ்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் சங்க நிா்வாகிகளை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து மாலை வரை போராட்டத்தை தொடா்ந்தனா். மாணவா்களின் முற்றுகை போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.