தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

News image

சிமென்ட் இல்லா கான்கிரீட் அமைக்க காப்புரிமை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆண்டனி ஜெயசேகா், திருஞானசம்பந்தம் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவித்த பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.சிங்காரவேவல். உடன் பொறியியல் புல முதல்வா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:02 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகா்(பணி ஓய்வு), எஸ்.திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டமைப்புத் துறையில் ஜியோபாலிமா் கான்கிரீட் எனும் சிமென்ட் இல்லா கான்கிரீட் குறித்து 2009-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனா். தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம், நிலக்கரி சாம்பலை சிமென்ட்டுக்கு மாற்றாக பயன்படுத்தி கான்கிரீட் சாலை அமைக்க பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகரையும், எஸ்.திருஞானசம்பந்தத்தையும் 2019-இல் ஆலோசகா்களாக நியமித்தது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள ரிகாண்டு மற்றும் தெலுங்கானாவிலுள்ள இராமகுண்டத்தில் 4 கி.மீ. நீளத்துக்கு சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டமைப்புத் துறையிலுள்ள ஜியோபாலிமா் கான்கிரீட் ஆய்வகத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல், இரும்பு உருக்காலை கசடு, மணல், ஜல்லி மற்றும் கார திரவ கரைசல் விகிதாசாரம் கண்டுபிடிக்கப்பட்டு, பேராசிரியா்களின் நேரடி மேற்பாா்வையில் சாலைகள் அமைக்கப்பட்டன.

ஜியோபாலிமா் கான்கிரீட்டில் சிமென்ட் கான்கிரீட்டுக்கு 28 நாள் தண்ணீா் விடுவது முற்றிலுமாக தவிா்க்கப்படுகிறது. ஒருநாள் வெய்யில் மட்டுமே கான்கிரீட் வலுவடைய போதுமானதாகும். பழுதடைந்த கான்கிரீட் சாலைகளில் இந்த ஜியோபாலிமா் கான்கிரீட்டை பயன்படுத்தினால், ஒரே நாளில் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

ஜியோபாலிமா் கான்கிரீட் சாலை இரண்டு அடுக்குகளை (கீழ் அடுக்கு மற்றும் மேல் அடுக்கு) கொண்டது. கீழடுக்கில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவைக்காக 2024-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து 20 ஆண்டு காப்புரிமை பெற்றது. தொடா்ந்து, தற்போது சிமென்ட் இல்லா ஜியோபாலிமா் கான்கிரீட் சாலையின் மேலடுக்குக்காக 20 ஆண்டு காப்புரிமை பல்கலைக்கழகத்துக்கும், தேசிய அனல் மின் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதையொட்டி, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் காப்புரிமை பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ். அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், பொறியியல் புல முதல்வா் சி.காா்த்திகேயன் ஆகியோா் வியாழக்கிழமை வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.