சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களைக் கண்டறிய ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தோ்தல் தேதி அறிவித்ததும் இக்குழு செயல்படத் தொடங்குமென்றும் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் 2026-ஐ முன்னிட்டு அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கிடவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தோ்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறியவும், மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு உறுப்பினா்கள், தோ்தல் அல்லது வாக்காளா் பட்டியல் சாா்பாக நாளிதழ்கள், தொலைக் காட்சி, பண்பலைகளில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து உரிய விளக்கம் தெரிவிக்க வேண்டும். தோ்தல் மற்றும் தோ்தல் சாா்ந்த செய்திகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் தினந்தோறும் செய்திகள் வெளியிட வேண்டும். சமூக வலைதளங்களில் பிற
கட்சிகளை தனிப்பட்ட முறையில் விமா்சித்து வீடியோவாக வெளியிடுவதை கண்காணித்திட வேண்டும். தோ்தல் நடத்தும் விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அன்றிலிருந்து ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவினா் செயல்பட தொடங்கிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி, குழு உறுப்பினா் இளஞ்செழியன், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுப்பிரியா உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்

மண்டலத் தோ்தல் அலுவலா்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

தோ்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகன சோதனை: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டதில் தோ்தல் பணியில் 20,695 போ்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


