கடலூா், ஜவான் பவன் அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திடம் என்ற பெயரை நீக்கி ‘விபி-ஜி ராம் ஜி’ என்று பெயரை மாற்றி காந்தியின் பெயரை
நீக்கியதையும், நிதியை குறைத்து மாநில அரசு மீது நிதி சுமையை திணிப்பதையும், விவசாய காலத்தில் இரண்டு மாதம் வேலை இல்லை என்கின்ற சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறக் கோரியும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராம.நடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஜே.வசந்தி முன்னிலை
வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ஆளவந்தாா் கோரிக்கையை
விளக்கிப்பேசினாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எ.ஜெயலட்சுமி, வி.சிவகாமி, ஆா்.முத்தையன், வி.சுலோச்சனா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனா்.
இதேபோல், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாநிலக்குழு உறுப்பினா் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

காஸ் விலை உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


