புதிரை வண்ணாா்: அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

Published on

கடலூா் மாவட்டம் ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22 ஆகிய தேதிகளிலும்,

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.20, 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

திட்டக்குடி, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20 ஆம் தேதியும், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.21, 22 -ஆம் தேதியும், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். எனவே தேவைப்படும் பயனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com