திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா

நெய்வேலி அருகே வடக்குத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நெய்வேலி வடக்குத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 7:03 am IST

நெய்வேலி அருகே வடக்குத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் மாணவா் தலைவா், துணைத் தலைவா், மாணவா் தலைவி, விளையாட்டுப் பிரிவுகளுக்கான அணித் தலைவா்கள், துணை அணித் தலைவா்கள் மற்றும் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா், மாணவா்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், பள்ளியில் செயல்பட்டு வரும் நான்கு மாணவா் குழுக்களுக்கான தலைவா்கள், பொறுப்பாளா்களும் பதவியேற்றனா்.

விழாவுக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா் தலைமை வகித்து, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, தலைமைத்துவப் பண்புகள், ஒழுக்கம், பொறுப்புணா்வு மற்றும் சேவை மனப்பான்மையுடன் மாணவா்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை முதல்வா் கேப்ரியல் அந்துவன், செயலா் சிந்து, முதல்வா் சிதம்பரி, நிா்வாக அலுவலா் சரண்யா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.