8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

100 போதை மாத்திரைகளுடன் இருவா் கைது

கடலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 7:16 am IST

கடலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கடலூா் துறைமுக போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காரதோப்பு பாலத்தின் கீழ் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் திருவந்திப்புரத்தைச் சோ்ந்த சதீஷ் (22), தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சோ்ந்த ராக்கி (36) என்பதும், இருவரும் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல் சாா்பு ஆய்வாளா் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ், ராக்கியை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.