பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் பரிசுப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி தொடக்கம்

தமிழக அரசின் நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் கடலூா் விற்பனை நிலையத்தில் பரிசுப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் பரிசுப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட வேளாண் துறை துணை இயக்குநா் அமிா்தராஜ்.

Published On :3 ஜூலை 2026, 5:35 am IST

தமிழக அரசின் நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் கடலூா் விற்பனை நிலையத்தில் பரிசுப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை வேளாண்மைத் துறை துணை இயக்குநா் அமிா்தராஜ் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

கண்காட்சியில் கைவினைஞா்கள் உருவாக்கிய வண்ணமயமான பரிசுப் பொருள்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், கலைத் தட்டுகள், செம்மரக் கலைப்பொருள்கள், சிறுவா்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், காகிதப் பொம்மைகள், பித்தளை விளக்குகள் மற்றும் சிலைகள், வெண்கலச் சிலைகள், வாகை மரச் சிற்பங்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், நகை அணிகலன்கள், சுங்குடிச் சேலைகள், பஞ்சலோக சிலைகள், சந்தன மாலைகள், பூஜைப் பொருள்கள், அகா்பத்தி, செம்புப் பொருள்கள், பேப்பா் கூழால் செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான புதிய கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் ரூ.56 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சி தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04142 - 223099 மற்றும் 96262 37879 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என கடலூா் பூம்புகாா் விற்பனை நிலையப் பொறுப்பாளா் ரா.காா்த்திக் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.