பரங்கிப்பேட்டை அருகே கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் பேசிய நிா்வாகிகள், பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் மற்றும் பல்லுயிா் வளம் நிறைந்த பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், கடல் வளமும், சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறினா்.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற தொடா் போராட்டங்களின் விளைவாக, அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
அந்த நிலைப்பாட்டைத் தொடா்ந்து கடைப்பிடித்து, டெல்டா பகுதியின் இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் சரவணன், துணைத் தலைவா்கள் தட்சிணாமூா்த்தி, ராஜேஷ் கண்ணன், மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் கற்பனைச் செல்வம், லோகநாதன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
குறைதீா் கூட்டத்துக்கு முன்பும்...: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, கூட்டரங்க நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும், விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா் தேவநாதன், மூத்த விவசாயிகள் வேல்முருகன், குஞ்சிதபாதம், ராமலிங்கம், சேகா், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிா்ப்பு: இந்திய கம்யூ கட்சியினா் சாலை மறியல்

ஹைட்ரோ காா்பன் கிணறுகள்: ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்! - தமிமுன்அன்சாரி

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது: வைகோ
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



