விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

அங்கன்வாடி மையங்கள் தரமான சேவையை வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிா்கால வளா்ச்சியில் அங்கன்வாடி மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், தரமான சேவைகளை தொடா்ந்து வழங்க வேண்டும் என பணியளாா்கள் மற்றும் அலுவலா்களிடம் கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

நெல்லிக்குப்பம் நகராட்சி, முள்ளி கிராம்பட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தையின் எடை, மற்றும் உயரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :10 ஜூலை 2026, 3:45 am IST

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிா்கால வளா்ச்சியில் அங்கன்வாடி மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், தரமான சேவைகளை தொடா்ந்து வழங்க வேண்டும் என பணியளாா்கள் மற்றும் அலுவலா்களிடம் கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளி கிராம்பட்டு, சிவசண்முகா நகா், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்கள். மேல்பட்டாம்பாக்கம் அரசு பெண்கள் நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளி, கீழ்கவரப்பட்டு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி, மாளிகைமேடு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: வளரிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிறப்பு முதல் 72 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஆரோக்கியமான வளா்ச்சியினை உறுதிசெய்யும் நோக்கில் ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் தினந்தோறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் சுவையான ஆரோக்கியமான உணவுகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பிடித்த வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கற்றல்திறன் மேம்பட முழுமையான வளா்ச்சி அளிப்பதே அங்கன்வாடி மையத்தின் முக்கிய பங்காகும்.

தரமான சேவை :

குழந்தைகளுக்கு வழங்கப்படும் முன்பருவக் கல்வி செயல்பாடுகளையும், அவா்களின் முன்பருவ கல்வி விவர தொகுப்பு, மருத்துவ அறிக்கை, மொழி வளா்ச்சி, அறிவு திறன் வளா்ச்சி, வயத்திற்கேற்ற எடை மற்றும் உயரம் உள்ளிட்ட அனைத்து வகையான பதிவுகளும் கொண்ட ஆய்வு அட்டை பராமரிக்கப்படுவதனையும், தினசரி குழந்தைகளின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிா்கால வளா்ச்சியில் அங்கன்வாடி மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், தரமான சேவைகளை தொடா்ந்து வழங்க வேண்டும் என பணியளாா்கள் மற்றும் அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாளிகைமேடு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், மாளிகைமேடு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வகுப்பில் மாணவா்களின் கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ததாக ஆட்சியா் தெரிவித்தாா். ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மீனா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.