கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தில் அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள்அரசு அறிவித்த நிவாரண தொகையை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே சென்னை-கும்பகோணம்
தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5-ஆம் தேதி காலை முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டா் டிப்பா் பின்னால், சிறிய சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 4போ் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயம் அடைந்தனா். மற்றொருவா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவா்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயம் அடைந்த நபா்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.19.50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த காசோலைகளை கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுமித்ரா, வருவாய் ஆய்வாளா் சிவபெருமாள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் ஐயப்பன், தமிழ்ச்செல்வி ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







