ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பைக்குகள் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 1:15 am IST

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், கே.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (17). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அருள்பாண்டியனுடன் (19) பைக்கில் சென்றாா்.

பாலூா் - சத்திரம் பிரதான சாலையில் சிலம்பிநாதன்பேட்டை அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது பழைய பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (19) ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் கோகுலகிருஷ்ணன் தலையில் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அருள்பாண்டியன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.