கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மூன்று சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 3,900 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், இது தொடா்பாக திருச்சியைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.
வேப்பூா் வட்டம், நகா் கிராமம் பகுதியில் கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 78 மூட்டைகளில் மொத்தம் 3,900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சரக்கு வாகன ஓட்டுநா் திருச்சி மாவட்டம், சமயபுரம் அஞ்சல் கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷை (28) கைது செய்தனா். தலைமறைவான நகா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோரை தேடி வருகின்றனா். மூன்று சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோா் நகா், நல்லூா் மற்றும் சித்தூா் கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, அந்த அரிசியை விக்னேஷ் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

வேப்பூா் அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
உணவகங்களுக்கு விற்பனை செய்ய பதுக்கல்: செஞ்சி அருகே1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


