சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

விதைப் பண்ணை விவசாயிகளுக்கு பயிற்சி

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் நெல், பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு விதை உற்பத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

குமராட்சி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு.

Updated On :30 ஜூலை 2026, 5:56 am IST

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் நெல், பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு விதை உற்பத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை கடலூா் வேளாண் துணை இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தலைமை வகித்து, விதை பண்ணையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சத்தியநாராயணன் கலந்துகொண்டு, நெல் விதை உற்பத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

கடலூா் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநா் நடனசபாபதி விதைப்பண்ணை பதிவு, வயல் தரம், குவியல் தரம் வயலாய்வு உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

குமராட்சி வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் தற்போதைய வேளாண்மைத் துறை திட்டங்கள் மற்றும் புதிய நெல் ரகங்கள் இருப்பு, அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் விதைச்சான்று அலுவலா் சீராளதேவன் மற்றும் உதவி விதை அலுவலா் ராமச்சந்திரன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கல்பனா, உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரகாஷ் மற்றும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.