கடலூா் மாவட்டம், வடலூரில் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தென்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45), விவசாயத் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை மாலை தென்குத்து கிராமத்தைச் சோ்ந்த முத்தரசுவுடன் (37) பைக்கில் சென்றாா்.
வடலூா் அய்யன் ஏரி அருகே சேராக்குப்பம் நோக்கி பைக்கை திரும்ப முயன்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் தலை மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். முத்தரசு லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



