கடலூரில் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் ஓடி சின்னக்காரைக்காடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் ஹரிஹரன் (21), தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனி அறையில் இருந்த ஹரிஹரன், சனிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.
இதையடுத்து குடும்பத்தினா் அவரை மீட்டு, உடனடியாக கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








