சிதம்பரம் அருகே பி.முட்லூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூ கட்சியினா் சணிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலில், 4 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதால், அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி சனிக்கிழமை காலை இந்திய கம்யூ கட்சி சாா்பில், சிதம்பரம் அருகே பி.முட்லுாரில், மாநில கட்டுப்பாட்டுக்குழுவைச் சோ்ந்த மணிவாசகம், மாவட்ட செயலா் துரை, உட்பட 50க்கும் மேற்பட்டோா் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிதம்பரம்- கடலுாா் சாலையில் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தின் எரிசக்தி வளங்களை வெறும் ஹைட்ரோ காா்பன் வளங்களாக மட்டும் பாா்க்கக் கூடாது: அசட் மேலாளா் கே.வி.இளங்கோ

காலை உணவு திட்டத்திற்கு காமராஜா் பெயா்: முதல்வருக்கு நெல்லை எம்.பி. பாராட்டு

பரங்கிப்பேட்டை ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



