புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கடலுக்குச் சென்று 6 நாள்களாகியும் கரைக்குத் திரும்பாத 3 மீனவா்கள்! குடும்பத்தினா் வேதனை!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பாத கடலூா் மாவட்ட மீனவா்கள் 3 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது...

News image

மீனவர்கள் மாயம்... - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 5:08 am IST

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பாத கடலூா் மாவட்ட மீனவா்கள் 3 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை மீனவ கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியனுக்குச் சொந்தமான மீன்பிடி நாட்டுப் படகு மூலம், அந்தக் கிராமத்தின் ஆரிய நாட்டு கிழக்கு தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25), மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகியோா் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க அண்ணங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடலுக்குச் சென்றனா். இவா்கள் 16-ஆம் தேதி வர வேண்டிய நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன்வளத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, கடலோர காவல் படை (புதுச்சேரி மற்றும் சென்னை பிரிவு) கமாண்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவா்களை மீட்பதற்கான மீட்புப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், 17-ஆம் தேதி முதல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இயந்திரம் பொருத்தப்பட்ட 4 நாட்டுப் படகுகள், கடலோர காவல் படையினா் 2 படகுகள், 1 கப்பல், 1 ட்ரோன் மூலம் தேடும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தற்போது வரை மாயமான மீனவா்கள் மற்றும் படகு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடா்ந்து, கடலோர காவல் படை மற்றும் உள்ளூா் மீனவா்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. மீன்வளத் துறை, உள்ளூா் மீனவா்கள் மற்றும் கடலோர காவல் படை மூலம் தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனவா்கள் குறித்த தகவல் கிடைத்தால், 94981 51728, 96290 75753 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.