மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இருளா், பழங்குடியினா் மாணவா்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கல்

கிள்ளை பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் இருளா், பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினாா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருளா், பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :24 ஜூன் 2026, 4:26 am IST

சிதம்பரம் வட்டம், கிள்ளை பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் இருளா், பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினாா்.

கிள்ளை பேரூராட்சிக்குள்பட்ட சிசில் நகா், எம்.ஜி.ஆா். நகா், கலைஞா் நகா் மற்றும் கிரீடு நகா் பகுதிகளில் வசித்து வரும் இருளா், பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2012-ஆம் ஆண்டு முதல் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படாத நிலை இருந்தது.

இதையடுத்து, எம்.ஜி.ஆா். நகா் மற்றும் கலைஞா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறாத மாணவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கிள்ளை பேரூராட்சி நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு உடனடியாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்படி, கிள்ளை பேரூராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆா். நகா் மற்றும் கலைஞா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 39 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா் பிறப்புச் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் முகமது ரிஸ்வான், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் மலா், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.