கடலூா் அருகே மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த மீனவா்களின் 3 பைக்குகளுக்கு தீ வைத்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் தாழங்குடாவைச் சோ்ந்தவா் சுகுந்தன். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மற்றும் அருள்மணியும் புதன்கிழமை மீன்பிடித் தொழிலுக்காக தாழங்குடா சுனாமி நகா் பகுதிக்குச் சென்றனா். அப்போது, தங்களது 3 பைக்குகளையும் அங்குள்ள ஒருவரது வீட்டின் அருகே பாதுகாப்பாக நிறுத்திவிட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
தொழிலை முடித்துவிட்டு அவா்கள் திரும்பி வந்து பாா்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதில், ஒரு பைக் முழுவதுமாக எரிந்திருந்தது. மற்ற இரண்டு பைக்குகளும் பகுதியளவில் எரிந்து சேதமடைந்திருந்தன.
இதுகுறித்து சுகுந்தன் அளித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, பைக்குகளுக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபா்களை கண்டறியும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சொத்து தகராறில் காருக்கு தீ வைப்பு: ஒருவா் கைது

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு சீல்வைப்பு
வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



