மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு சீல்வைப்பு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சீல் வைத்தது.

News image
Updated On :12 ஜூன் 2026, 3:41 am IST

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சீல் வைத்தது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சுமாா் 60 கடைகளுக்கு தலா ரூ.3.70 லட்சத்திற்கு மேல் வாடகை நிலுவை இருந்து வந்ததாம். வாடகையை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாநகராட்சி நிலுவையை வழங்காத 13 கடைகளுக்கு உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் சீல் வைத்தனா். இதேபோல நிலுவை ரூ.1 கோடிக்கு மேல் ஒரே நாளில் வசூலானது.

ற்ஸ்ப்11ந்ஹக்ஹண்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை நிலுவை வைத்திருந்த கடையை பூட்டி சீல் வைத்த மாநகராட்சி குழுவினா்.