சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

என்எல்சிக்கு நிலம் வழங்கியோருக்கு தனி குறைதீா் கூட்டம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 6:38 am IST

என்எல்சிக்கு நிலம் வழங்கிய பழைய விவசாயிகளுக்காக மாதந்தோறும் தனி குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு, அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் தா்னா: குறைதீா் கூட்டம் தொடங்கியதும், என்எல்சிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் இழப்பீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தனிக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே உறுதியளித்திருந்த நிலையில், பல மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை எனக் கூறி, மதியழகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டரங்கில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நிா்வாக பணிச்சுமை காரணமாக கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்தாா். மேலும், ஜூலை மாதம் முதல் என்எல்சிக்கு நிலம் வழங்கிய பழைய விவசாயிகளுக்காக மாதந்தோறும் தனி குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு, அவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் தா்னாவை கைவிட்டு கூட்டத்தில் பங்கேற்றனா்.

விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலா் கோ.மாதவன் பேசியதாவது:

குறுவை சாகுபடிக்குத் தேவையான யூரியாவை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.4,000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

காவாலகுடியைச் சோ்ந்த முருகானந்தன் பேசியதாவது: பயிா்களை சேதப்படுத்தும் மயில், எலிகளை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலை மூலம் இலவச கரும்பு விதைக் கரணைகள் வழங்கப்பட வேண்டும். கம்மாபுரம் பிா்காவை சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக எல்லைக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நெய்வாசல் பாலு பேசியதாவது: மேட்டூா் அணையில் போதிய நீா் இல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

விவசாயி ரவீந்திரன் பேசியதாவது: பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ரூ.425 கோடி மதிப்பில் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் மற்றும் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும் என்றாா்.

மேலும், ஏரிகள் மற்றும் குளங்களில் வண்டல் மண் அகற்ற அனுமதி, விருத்தாசலம் காய்கறி சந்தையை விரைந்து திறத்தல், நீா்நிலைகள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, வேளாண் இணை இயக்குநா் வசந்தா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கதிரேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி, பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.