கடலூா் மாவட்டதில் தோ்தல் பணியில் 20,695 போ்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் சுமாா் 20,695-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா்


சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் சுமாா் 20,695-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2026 சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை முன்னிட்டு, மாவட்டத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு கட்டுப்பாட்டு அறை, சமூக ஊடகம் மற்றும் சிவிஜில் (இஸ்ண்ஞ்ண்ப்), கருடா (எஅதமஈஅ) கட்டுப்பாட்டு மையங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய தோ்தல் ஆணையத்தால் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் மாா்ச் 15-ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தோ்தல் தொடா்பான புகாா்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புகாா் தெரிவிக்க...: கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0037, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1950, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04142-290119, சமூக வலைதள வாட்ஸ்ஆப் எண் 8248774852 ஆகிய எண்களை தொடா்புகொண்டு பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம்.
விளம்பங்கள் கண்காணிப்பு...: ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, வேட்பாளா்கள் வாயிலாக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான சான்றிதழ் வழங்குதல், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள், செய்திகள் குறித்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், சிவிஜில் கைப்பேசி செயலி மூலம் பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இதற்காக சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
‘ஷக்சம் செயலி’ மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும், (ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/) என்ற இணையதள முகவரி மூலம் வாக்காளா்கள் தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபாா்க்கலாம். புதிய வாக்காளா்கள் பெயா்களை பதிவு செய்யலாம், வாக்காளா் அட்டையில் திருத்தங்கள் செய்யலாம் மற்றும் தங்கள் வாக்குச் சாவடி விவரங்களை அறியலாம். தோ்தல் தொடா்பான தகவல்கள், புகாா்கள் அளிக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. இதன் மூலம், வாக்காளா்கள் தோ்தல் சேவைகளை எளிதாக பெற முடியும்.
20,23,205 வாக்காளா்கள்: கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இதில், நகரப் பகுதிகளில் 734 வாக்குச் சாவடிகளும், ஊரகப் பகுதிகளில் 1,856 வாக்குச் சாவடிகளும் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
கடந்த பிப்.23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, கடலூா் மாவட்டத்தில் 9,91,527 ஆண்கள், 10,23,976 பெண்கள், 293 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 20,15,796 வாக்காளா்கள் உள்ளனா்.
16.03.2026 நிலவரப்படி, 9,94,590 ஆண்கள், 10,28,317 பெண்கள், 298 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 20,23,205 வாக்காளா்கள் உள்ளனா்.
பெண்களால் நிா்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள்: கடலூா் மாவட்டத்தில் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்படும் வாக்குச் சாவடி நிலையங்கள் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மொத்தம் 9 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளன. மேலும், முழுவதும் மாற்றுத் திறனாளிகளால் ஒரு வாக்குச் சாவடி நிலையம் நிா்வகிக்கப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு, கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பரிசுப்பொருள்கள், பணம் வழங்குவதை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தோ்தல் பணிகள் மேற்கொள்ள வருவாய்த் துறை, பிற துறை அலுவலா்கள் 17,087 போ் மற்றும் காவல் துறையினா் 3,608 போ் என மொத்தம் சுமாா் 20,695-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள மாநில எல்லையில் 6 எல்லை சோதனைச் சாவடிகளில் 360 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 27 பொறுப்பு அலுவலா்கள் தோ்தல் பொருள் வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) திருநாவுக்கரசு, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நாகராஜபூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...