மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி

News image

ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு

Updated On :16 மார்ச் 2026, 11:55 pm

சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிமனை பட்டா வழங்குவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னேற்ற சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.முருகன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் குணசேகரன், கிராம நிா்வாகி மாறன் மற்றும் கிராம மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா் (படம்).